நவகிரக மந்திரங்கள்
|ஆதித்யன் (சூரியன்) :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:
பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்
ஸ்லோகம் :
ஜபாகுஸும ஸங்காசம்
காஷ்ய பேயம் மஹத்துதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்
ப்ரனதொஷ்மின் திவாகரம்!!
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தாமரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமிரம்.
ஸ்ரீ சந்திரன்
ஸ்ரீ சந்திர காயத்ரீ மந்திரம்
ஓம் பத்ம த்வஜாய வித்மகே ஹேம ரூபாய தீமகீ தன்னோ ஸோம பிரசோதயாத்
ஸ்லோகம் :
ததிசங்க துஷாராபம்
க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!
நமாமி ஸசிநம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை – துர்க்கா தேவி, தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ளரளி, ரத்தினம் – முத்து, உலோகம் – ஈயம்.
ஸ்ரீ அங்காரகன்
ஸ்ரீஅங்காரக காயத்ரீ மந்திரம் :
ஓம் வீர த்வஜாய வித்மஹே : விக்ன ஹஸ்தாய தீமஹி! தந்நோ பௌம ப்ரசோதயாத்!
ஸ்லோகம் :
தரனி ஹர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காஞ்சன ஸந்நிபம் குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச மங்களம் ப்ரணமாம்யகம்
செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடு க்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை – முருகன், தானி யம் – துவரை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – சண்பகம், ரத்தினம் – பவழம்,உலோகம் – செம்பு.
ஸ்ரீ புதன்
ஸ்லோகம் :
ப்ரியங்குகளிகாஷ்யாமம்
ரூபேனா ப்ரதிமம் புதம்!
ஸௌமியம் ஸௌமிய குணோபேதம்
தம் புதம் ப்ரனமாம்யகம்!!
ஸ்ரீபுத காயத்ரீ மந்திரம் :
ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ ப்ரசோதயாத்.
புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி – கட லை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை – விஷ்ணு, தானியம் – பச்சைப் பயிறு, வஸ்திரம் – பச்சைப்பட்டு, புஷ்பம் – வெண் காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் – பித்தளை.
ஸ்ரீ குரு பகவான்
ஸ்ரீ குரு காயத்ரீ மந்திரம் :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
ஸ்லோகம் :
தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச
குரும் காஞ்சந ஸன்நிபம்!
புத்தி பூதம்திரிலோகாநாம
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தநாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக் கும். குரு பகவானின் தேவதை – ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் – கொண்டை கடலை, வஸ்திரம் – மஞ்சள், புஷ்பம் – முல்லை, ரத்தினம்– புஷ்பராகம்.
ஸ்ரீ சுக்கிர பகவான்
ஸ்ரீ சுக்ர காயத்ரீ மந்திரம் :
ஓம் அச்வத்வஜாய வித்மஹே: தநுர்ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்கிர ப்ரசோதயாத்.
ஸ்லோகம் :
ஹிமகுந்த மிருனாலாபம்
தைத்யாணாம் பரமம் குரும்!
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!
வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படு கிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான்தொல்லை கள் நீங்கி, நல்லவை நடக்கும்.வெள்ளிக் கிழமை யன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய் வது நல்லபலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை – வள்ளி, தானியம் – வெள்ளை மொச்சை, வஸ்திரம் – வெண்பட்டு, புஷ்பம் – வெண்தாமரை, உலோகம் – வெள்ளி, ரத்தினம் – வைரம்.
ஸ்ரீசனிஸ்வரர்
ஸ்ரீ சனீஸ்வர காயத்ரீ மந்திரம் :
ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்.
ஸ்லோகம் :
நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்!
சாயா மார்த்தான்ட ஸம்பூதம்
தம் நமாமி சனீஸ்வரம்!!
சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரை யாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனி பகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் – எள், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், ரத்தினம் – நீலம், புஷ்பம் – கருங்குவளை, உலோகம் – இரும்பு.
ஸ்ரீ ராகு பகவான்
ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம் :
ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராக ப்ரசோதயாத்.
ஸ்லோகம் :
அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!
ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகு விரதத்தை அனுஷ் டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலு ப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை – பத்ரகாளி, தானியம் – உளுந்து, ரத்தினம் – கோமேதகம், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், உலோகம் – கருங்கல், புஷ்பம் – மந்தாரை மலர்.
ஸ்ரீகேதுபகவான்
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்
பலாஷ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம்கேதும் ப்ரணமாம்யகம்!!
கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களு ம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக் கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேது விற்குரிய தேவதை – விநாயகர், தானியம் – கொள்ளு, வஸ்திரம் – பலகலர் கலந்த வஸ்திர ம், ரத்தினம்–வைடூரியம், புஷ்பம் – செவ்வல்லி, உலோகம் – துருக்கல்.
நவகிரக மந்திரம் :
ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா.